மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களாக கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என தொடர்ந்து பயணித்து வருபவர் நடிகர் முகேஷ். தற்போது கேரளாவில் கொல்லம் தொகுதியின் எம்எல்ஏ ஆகவும் இருக்கிறார். நடிகை சரிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் ஒரு கட்டத்தில் அவரை விவாகரத்து செய்துவிட்டு நாட்டிய நடிகை மெத்தில் தேவிகா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். எட்டு வருட திருமண வாழ்க்கை கசந்த நிலையில் தற்போது முகேஷிடம் இருந்து கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் மெத்தில் தேவிகா, முகேஷுடன் விவாகரத்திற்கும் விண்ணப்பித்துள்ளார்.
இந்த நிலையில் இவருக்கும் இவரது மகனுக்கும் ஆஸ்திரேலியா அரசாங்கம் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக தங்குவதற்கான குடியுரிமையை வழங்கியுள்ளது. இது குறித்த தகவலை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ள மெத்தில் தேவிகா, உலகளாவிய சமூக செயல்பாடுகள் மற்றும் திறமைகளின் அடிப்படையில் போட்டி நிறைந்த இந்த பிரிவில் தான் தேர்வாகியுள்ளதாக கூறியுள்ளார்.