மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருப்பவர் நடிகர் மோகன்லால். சமீபத்திய ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக நடிகர் சங்கத்தில் தான் பொறுப்பு வகித்து வந்த தலைவர் பதவியை கூட ராஜினாமா செய்யும் அளவிற்கு கடினமான சூழலை எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக பல நடிகர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்கும் நடிகைகள் அனைவருமே தங்கள் விஷயத்தில் நடிகர் சங்கம் ஆதரவாக நிற்கவில்லை என்று குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து மோகன்லால் தனது நடிகர் சங்க பதவியை செய்தார்.
இன்னொரு பக்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவிக்கு முக்கியமான அறுவை சிகிச்சை ஒன்றும் சென்னையில் நடைபெற்றது. இப்படி ஒரு கடின சூழலை எதிர்கொண்டு வரும் மோகன்லாலுக்கு சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்று மிகப்பெரிய ரிலாக்ஸ் ஆக அமைந்துள்ளது.
கடந்த 1987ல் மோகன்லால் நடிப்பில் இயக்குநர் கமல் இயக்கத்தில் வெளியான படம் 'உன்னிகளே ஒரு கத பறயாம்'. இந்த படம் வெளியாகி 37 வருடங்கள் ஆன நிலையில் இந்தப் படத்தில் நடித்த பங்கு பெற்ற அனைவரும் இதைக் கொண்டாடுவதற்காக சமீபத்தில் மீண்டும் ஒன்று கூடினர். இந்த நிகழ்வில் மோகன்லாலும் பங்கேற்றார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கார்த்திகா, வாட்ஸ் அப் குரூப் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இந்த படத்தில் நடித்தவர்களை தேடிக்கண்டுபிடித்து ஒருங்கிணைத்து இந்த மீள் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்.. இவர் நாயகன் படத்தில் கமலின் மகளாகவும் பூவிழி வாசலிலே படத்தில் சத்யராஜின் ஜோடியாகவும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.