விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

மலையாள நடிகர் நிவின்பாலி கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்வி படங்களாகவே கொடுத்து இறங்கு முகத்தில் இருந்து வந்தார். இந்த வருடம் அடுத்தடுத்து வெளியான வர்ஷங்களுக்கு சேஷம் மற்றும் மலையாளி பிரம் இந்தியா ஆகிய படங்களுக்கு கிடைத்த வரவேற்பு அவரை சரிவிலிருந்து ஓரளவு மீட்டு பழைய நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் இயக்குனர் ராம் இயக்கத்தில் இவர் தமிழில் நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படமும் வெளியாகும்போது மீண்டும் தனது விட்ட இடத்தை இவர் பிடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் தற்போது மீண்டும் பிஸியாகியுள்ள நிவின்பாலி அடுத்ததாக சேகர வர்ம ராஜாவு என்கிற வரலாற்றுப் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் துவங்கியுள்ளது. ஏற்கனவே காயங்குளம் கொச்சுண்ணி என்கிற வரலாற்று படத்தில் நடித்த நிவின்பாலிக்கு அவர் நடிக்கும் இரண்டாவது வரலாற்று படம் இது. 
கேரளாவில் பிரசித்தி பெற்ற சேகர வர்ம ராஜா என்பவரின் கதாபாத்திரத்தில் நிவின்பாலி நடிக்கிறார். இந்த படத்தை அனுராஜ் மனோகர் என்பவர் இயக்குகிறார். 
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            