அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

மலையாள திரையுலகில் கடந்த சில நாட்களாகவே பிரபல நட்சத்திரங்கள் பலரும் தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகின்றனர். சமீபத்தில் இது குறித்து வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை தந்த துணிச்சலில் பாதிக்கப்பட்ட நடிகைகள் பலரும் தங்களது கசப்பான அனுபவங்களை குறித்து பொதுவெளியில் பேசி வருகின்றனர். அந்த வகையில் அஞ்சலி அமீர் என்கிற திருநங்கை நடிகை பிரபல மலையாள நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடு மீது வித்தியாசமான ஒரு பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இயக்குனர் ராம் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான பேரன்பு படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை அஞ்சலி அமீர். அந்த படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் தமிழில் அவரது காட்சிகள் இடம் பெறவில்லை.
“அந்த படப்பிடிப்பு சமயத்தில் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு என்னிடம் வந்து உங்களைப் போன்ற திருநங்கைகள் சாதாரண பெண்களைப் போல சந்தோஷத்தை உணர முடியுமா என்று கேட்டபோது நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக மம்முட்டியிடமும் படத்தின் இயக்குனரிடமும் இது குறித்து தெரிவித்தேன். அவர்கள் இருவரும் அந்த நடிகரை அழைத்து கண்டித்தனர். அவரும் என்னிடம் அதுகுறித்து மன்னிப்பு கேட்டதுடன் படப்பிடிப்பு முடியும் வரை என்னிடம் எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் டீசன்டாக நடந்து கொண்டார். அதற்காக அவரை நான் பாராட்டவும் செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.