''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
சமீபத்தில் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி, திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த முறை இதே திருச்சூரில் தோல்வியை தழுவிய அவர் தற்போது வெற்றி பெற்று கேரளாவில் வெற்றிபெற்ற முதல் பாஜக எம்பி என்கிற பெயரையும் பெற்றுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு சிஏஏ மசோதா அமல்படுத்தப்பட்ட போது அதற்கு எதிர்ப்பாக நடைபெற்ற பேரணியில் மலையாள நடிகையும் சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவருமான நிமிஷா சஜயன் பேசும்போது, சுரேஷ்கோபியை விமர்சிக்கும் விதமாக, கடந்த தேர்தலில் திருச்சூரில் தோல்வி அடைந்ததை குறித்து கிண்டல் அடிக்கும் விதமாக கருத்துக்களை கூறினார். அதற்காக அப்போதே அவர் கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.
இந்த நிலையில் சுரேஷ்கோபி திருச்சூரில் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் நிமிஷா சஜயன் மீது சோசியல் மீடியாவில் விமர்சன தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். இதனை தொடர்ந்து நிமிஷா சஜயன் தனது கமெண்ட் செக்சனை அணைத்து வைத்துவிட்டார்.
சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து பேசிய சுரேஷ் கோபியின் மகனும், நடிகருமான கோகுல் சுரேஷ் கூறும்போது, “நிமிஷா சஜயன் மீதான இந்த கருத்து தாக்குதல் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இப்போது மட்டுமல்ல கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் பேசியபோதும் இதேபோன்று ஒரு எதிர்வினைக்கு அவர் ஆளானார். இதுபோன்று யாரையும் அநாகரிகமான கருத்துக்களால் தாக்குவது தவறு.
அதேசமயம் தனது துறையில் பணியாற்றும் ஒரு சக சீனியர் தொழிலாளியாக, மக்கள் மதிக்கும் ஒரு நடிகராக இருக்கும் நபரை பற்றி நாம் இப்படி கூறுகிறோமே இதன் பின் விளைவு எப்படி இருக்கும் என்று அவர் அப்போது முன்பின் யோசிக்காமல் பேசியதை தவிர்த்து இருக்கலாம். மீடியாக்களில் என் தந்தை சுரேஷ்கோபி பற்றி பெரும்பாலும் எதிர்மறையாகவே காட்ட முயற்சி நடக்கிறது. என் தந்தையை பற்றி எந்த விஷயங்களையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் இதுபோன்ற செய்திகளை மட்டுமே அடிப்படையாக வைத்து நிமிஷா சஜயன் போன்றவர்கள் அவரைப் பற்றி தவறாக புரிந்து வைத்திருப்பது வருத்தம் அளிக்கிறது” என்றும் கூறியுள்ளார்.