‛அமரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் | ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கழுதை! களமிறங்கிய பீட்டா இந்தியா!! | ரஜினியின் ‛வேட்டையன்' ரிலீஸ் : படம் பார்த்த பின் தனுஷ் வெளியிட்ட பதிவு | ''என்னால முடியும்; ப்ரூவ் பண்ணி ஜெயிச்சு காட்டுவேன்'': நெப்போலியன் மகன் வீடியோ வெளியீடு | ரத்தன் டாடா தயாரித்த ஒரே படம் | டைட்டிலை கைப்பற்ற போராடும் ‛கேம் சேஞ்சர்' தயாரிப்பாளர் | விஜய் 69வது படம் தெலுங்கு படத்தின் ரீமேக்கா? | "பொங்கலுக்கு வேற லெவல் என்டர்டெயின்மென்ட்": அஜித் மேனேஜர் பகிர்ந்த புகைப்படம் வைரல் | நாளை வெளியாகும் 'நேசிப்பாயா' படத்தின் முதல் பாடல்! | மகேஷ் பாபு - ராஜமவுலி பட படப்பிடிப்பு எப்போது? |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான படம் ஜன கன மன. போலி என்கவுண்டர் விவகாரத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருந்த இந்த படம் என்கவுண்டரின் பின்னணியில் உள்ள அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன் ஆந்திராவில் இளம்பெண் ஒருவர் சில கயவர்களால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். மறுநாளே, சஜ்ஜனார் என்கிற போலீஸ் அதிகாரி தலைமையில் குற்றவாளிகள் அனைவரும் என்கவுன்டரில் கொல்லப்பட்ட சம்பவமும் சஜ்ஜனாரை ரியல் ஹீரோ என்று பலரும் பாராட்டிய நிகழ்வும் நடந்தது பலருக்கும் ஞாபகம் இருக்கலாம்.
ஆனால் அப்படிப்பட்ட என்கவுன்டரே அரசியல் பின்னணிக்காக செய்யப்பட்டது தான். அதில் அப்பாவிகள் பலியாகி உள்ளனர் என்கிற புதிய கோணத்தில் இந்தப்படம் உருவாகி இருந்தது. இந்த படம் வெளியாகி சில மாதங்கள் கழித்து ஆந்திராவில் நடைபெற்ற என்கவுன்டரும் அப்படிப்பட்ட ஒரு போலியான என்கவுன்டர் தான் என்கிற அதிர்ச்சி தகவலும் வெளியானது. இந்த அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்திய இந்த படத்தை இயக்குனர் டிஜே ஜோஸ் ஆண்டனி என்பவர் இயக்கியிருந்தார்.
இந்த படம் வெளியாவதற்கு முன்பே இவர் இந்த படத்திற்காக வெளியிட்டிருந்த டீசர் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த காட்சி படத்தில் இடம் பெறவில்லை. அப்படியானால் இதற்கு இரண்டாம் பாகம் இருக்கிறதா என்று அப்போதே பேசப்பட்ட நிலையில் இரண்டாம் பாகம் இருக்கிறது என்றும் அதற்காக சில காட்சிகளும் எடுக்கப்பட்டு விட்டன என்று படம் வெளியான சமயத்தில் கூறி இருந்தார் இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி.
ஆனால் அதைத் தொடர்ந்து தற்போது நிவின்பாலி நடித்துள்ள மலையாளி பிரம் இந்தியா என்கிற படத்தை இவர் இயக்கியுள்ளார். வரும் மே 1ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஜன கன மன 2வை ஆரம்பிப்பாரா என சமீபத்தில் இவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த டிஜோ ஜோஸ் ஆண்டனி முதல் பாகத்திற்கு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அவர்கள் கொடுத்த வெற்றி இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்கான இன்னும் கூடுதல் பொறுப்பை எங்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. அதனால் இன்னும் கவனமாக இரண்டாம் பாகத்திற்கான கதையில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் இது குறித்த அப்டேட் தகவல் வெளியாகும் என்று கூறியுள்ளார்.