சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

கடந்த சில மாதங்களாகவே மலையாள திரை உலகில் வெளியாகும் சின்ன பட்ஜெட் படங்கள் கூட 100 கோடி, 200 கோடி என மிக பெரிய வசூல் இலக்கை தொட்டு சாதனை படைத்து வருகின்றன. இந்த சமயத்தில் தான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்விராஜ் நடிப்பில் உருவான ஆடுஜீவிதம் திரைப்படமும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வெளியானது. பிளஸ்சி இயக்கத்தில் பென்யமின் என்பவர் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. அரபு நாட்டிற்கு ஆடு மேய்க்க சென்ற கேரள இளைஞன் பட்ட துன்பங்களை மையப்படுத்தி உண்மை சம்பவத்தின் பின்னணியில் இந்த படம் உருவாகி இருந்தது.
கலகலப்பான பிரேமலு, விறுவிறுப்பான மஞ்சும்மேல் பாய்ஸ் ஆகிய படங்கள் போல அல்லாமல் இந்த படம் கொஞ்சம் சீரியஸான கதை அம்சத்துடன் உருவாகி இருந்தது. ஆனாலும் இந்தப்படத்திற்கும் ரசிகர்கள் அதே போன்ற வரவேற்பை முதல் நாளிலிருந்தே கொடுத்து வருகின்றனர். தற்போது படம் வெளியாகி 25 நாட்கள் ஆகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் சேர்த்து 150 கோடி இந்தப் படம் வசூலித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை நடிகர் பிரித்விராஜ் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.