சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து |
சமீபகாலமாக திரையுலகின் வளர்ச்சியில் சோசியல் மீடியாக்களின் பங்களிப்பு அதிக அளவில் இருக்கின்றது. அந்த வகையில் தெலுங்கு டிஜிட்டல் மீடியா பெடரேஷன் என்கிற அமைப்பு அதன் ஆரம்ப நாள் துவக்க சிறப்பு நிகழ்ச்சியாக ஐதராபாத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் சோசியல் மீடியாவை சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் சிரஞ்சீவியும் விஜய் தேவரகொண்டாவும் இதில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் விஜய் தேவரகொண்டாவிடமும் சிரஞ்சீவியிடமும் இவ்வளவு வசதி வந்த பின்னரும் அவர்கள் இன்னும் மாற்றிக் கொள்ளாத நடுத்தர வர்க்கத்து குணாதிசயங்கள் ஏதாவது இருக்கின்றதா என பார்வையாளர்கள் கேட்டனர்.
முதலில் விஜய் தேவரகொண்டா அதற்கு பதில் அளித்தபோது, “இப்போதும் நான் குளிக்கும்போது ஷாம்பூ பாட்டில் காலியாகிவிட்டால் அதை உடனே தூக்கி எறியாமல் அதில் இன்னும் கொஞ்சம் நீரை ஊற்றி குலுக்கி ஓரிரு நாட்களுக்கு பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்” என்று கூறினார்.
அதேபோல நடிகர் சிரஞ்சீவி கூறும்போது, “எனக்கும் இதே போல பழக்கம் உண்டு. ஆனால் அது ஷாம்பூ அல்ல சோப்.. நான் பயன்படுத்தும் சோப் கடைசியில் சிறு சிறு துண்டுகளாக உடைந்தாலும் அவற்றை தூக்கி எறியாமல் அவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து மீண்டும் ஓரிரு நாட்களுக்கு பயன்படுத்துவேன். இந்த பழக்கம் எனக்கு சிறுவயதில் இருந்து வருகிறது” என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, “என்னுடைய வீட்டில் அனைவருமே மின்சார செலவு பற்றி கவலைப்படாமல் செயல்படுவார்கள். அந்த வகையில் என் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு ஸ்விட்ச்சையும் தேடிச்சென்று அணைப்பது என் வேலை தான். சமீபத்தில் என் மகன் பாங்காங் சென்றிருந்தபோது ஹோட்டல் அறையிலிருந்து வெளியே கிளம்பி சென்றபோது அறையிலிருந்து லைட், பேன் எதையும் அணைக்காமல் கிளம்பி சென்று விட்டார். ஆனால் இதை தெரிந்தது நான் அங்கே சென்று அனைத்தையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டு வந்தேன். இப்படி தண்ணீர், மின்சாரம் இது போன்று விஷயங்களில் சிக்கனமாக இல்லாவிட்டால் இன்று பெங்களூர் தண்ணீருக்காக சந்திக்கும் சிரமங்களை போல நாளை நமக்கும் நேரலாம்” என்று கூறினார்.