‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
மகாநடி பட இயக்குனர் நாக் அஸ்வின் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'கல்கி 2898 ஏ டி' என்கிற படத்தை இயக்கி வருகிறார். கமல், அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஹனுமான் படத்தின் ஹீரோ தேஜா சஜ்ஜாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற செய்தி சோசியல் மீடியாவில் வெளியானது.
இது குறித்து சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்டபோது, “என்னுடைய திரை பயணத்தில் ரொம்பவே ஆச்சரியப்படுத்த கூடிய சில படங்கள் மற்றும் சில கொண்டாட்ட கூட்டணிகள் எல்லாமே அடுத்தடுத்து வர இருக்கின்றன. நானும் அவற்றை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது குறித்து சரியான நேரத்தில் உங்களிடம் வெளிப்படுத்தவும் செய்வேன்” என்று பதில் கூறியுள்ளார்.
அந்த வகையில் கல்கி படத்தில் நடிக்கிறேன் அல்லது நடிக்கவில்லை என்று தெளிவாக கூறாமல் மழுப்பலாக பதில் கூறியுள்ளார் தேஜா சஜ்ஜா.