3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? | சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ? | தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி | கருப்பு இன்று வெளியானது : எங்களுடன் துணை நின்றதுக்கு சூர்யா நன்றி | எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' |

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா கடந்த 22ம் தேதி நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி, குழந்தை வடிவிலான ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்தார். இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், சிரஞ்சீவி, மோகன்லால், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ரந்தீப் ஹூடா, மாதுரி தீக்ஷித், விக்கி கவுஷல், பாடகர் சங்கர் மகாதேவன், சோனு நிகம், ஆலியா பட், கத்ரீனா கைப், கங்கனா ரனாவத் என பல சினிமா நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி, தவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க முடியவில்லை என தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மலையாள நடிகர் மோகன்லால், அழைப்பு விடுத்தும் விழாவில் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது.
மோகன்லால், தற்போது தான் நடித்துள்ள 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தை விளம்பரம் செய்து வருகிறார். பட விளம்பர நிகழ்ச்சியில் பிசியாக இருப்பதால் அவரால் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.