தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு |
தெலுங்கு திரையுலகின் மறைந்த மூத்த நடிகரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி ராமாராவின் 25வது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையடுத்து என்.டி.ராமராவ் மகன்களில் ஒருவரும், பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா தனது தந்தையின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இதற்கு முன்னதாக என்.டி.ராமராவின் பேரன்களான நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் கல்யாணம் ராம் ஆகியோரும் தங்களது தாத்தாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர்.
பின்னர் பாலகிருஷ்ணா வந்தபோது அங்கே ஜூனியர் என்டிஆர், கல்யாண் ராம் மற்றும் அவர்களின் தந்தை ஹரி கிருஷ்ணா ஆகியோரின் பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதனை எடுத்து அப்புறப்படுத்தி வெளியே வைக்கும்படி தனது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார் பாலகிருஷ்ணா. அதன்படியே அந்த பேனர்கள் வெளியே கொண்டு வந்து வைக்கப்பட்டன. இது குறித்த வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலகிருஷ்ணாவின் இந்த செயல் இது என்.டி.ராமராவ் குடும்பத்தினருக்கு இடையே உள்ள பனிப்போரை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.