காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
ஜியோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி, ஜோதிகா நடித்துள்ள 'காதல் : தி கோர்' மலையாள படம் நாளை மறுநாள் (23-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கொச்சியில் நடந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்மூட்டியிடம் செய்தியாளர்கள் ஆன் லைன் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த அவர் “திரைப்படங்களை பார்த்து யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யட்டும். ஒவ்வொரு தனிநபருக்கும் அவரது கருத்துகளை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால், அது அவர்களின் சொந்தக் கருத்துக்களாக இருக்க வேண்டும். வெளிப்புற அழுத்தங்களாலோ, மற்றவர்களின் உந்துதல் காரணங்களாகவோ இருக்கக் கூடாது. ஆன்லைன் விமர்சனங்களை தடை செய்வதால் திரையுலகை காப்பாற்றிவிட முடியும் என நான் நினைக்கவில்லை. அதேபோல, ஒரு படத்தின் முடிவு என்பது ஆன்லைன் விமர்சனங்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்பதிலும் எனக்கு நம்பிக்கையில்லை” என்றார்.
ஆனால் மம்முட்டியின் கருத்தோடு இயக்குனர் ஜியோ பேபி ஒத்துப்போகவில்லை. “இன்றைக்கு பல ஆன்லைன் கன்டென்ட் கிரியேட்டர்கள் உருவாகிவிட்டனர். என்னை பொறுத்தவரை நான் ஆன்லைன் சினிமா விமர்சனங்களை பொருட்படுத்துவதில்லை. ஆன்லைன் விமர்சனங்களை வரைமுறைப்படுத்த வேண்டும்” என்றார். பேட்டியின் போது ஜோதிகா உடன் இருந்தார்.