லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கடந்த இரண்டு வருடங்களில் தொடர்ந்து வெற்றி படங்களில் கதாநாயகியாக இடம் பிடித்து தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் ராசியான கதாநாயகி என பெயரை பெற்று விட்டார் கல்யாணி பிரியதர்ஷன். இதை தொடர்ந்து தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் சேஷம் மைக்கில் பாத்திமா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மனு சி. குமார் என்பவர் இயக்குகிறார்.
ஏற்கனவே கல்யாணி நடிப்பில் கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான ஹிருதயம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த ஹேசம் அப்துல் வஹாப் தான் இந்த படத்திற்கும் இசையமைத்து உள்ளார். இந்த படத்திற்காக தட்டற தட்டற என்கிற பாடலை இசையமைப்பாளர் அனிருத் மலையாளத்தில் பாடியுள்ளார்.
இந்த படம் வரும் நவம்பர் மூன்றாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் நவம்பர் மூன்றாம் தேதியிலிருந்து வித்தியாசமான விளையாட்டு துவங்க இருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.