விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு |

நடிகர் அமித் சகலக்கல் கதாநாயகனாக நடிக்கும் "அஸ்த்ரா' மலையாள திரைப்படம் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளிவர இருக்கிறது. இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் அவர் நடித்துள்ளார்.
கதாநாயகியாக சுகாசினி குமரன் வயநாடு தலைசேரி காட்டில் தேன் எடுக்கும் பெண் தொழிலாளியாக நடித்துள்ளார். இவரை வன போலீஸ் அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்து விடுகின்றனர். இதையடுத்து காட்டில் பெண் போராளியாக மாறும் சுஹாஷிசனி குமரன் தன்னை சீரழித்தவர்களை மர்மமான முறையில் கொலை செய்கிறார். இது தான் கதையின் அம்சம். சுகாசினி குமரன் தமிழில் நடிகர் யோகி பாபு நடித்த லக்கி மேன் திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
இப்படத்தின் மூலம் சிவாஜி பேரன் துஷ்யவந்த் முதன் முதலாக மலையாள படவுலகில் நுழையவுள்ளார். மோகன் சித்ரா இசையமைத்துள்ளார். ரோனி ரபேல் பின்னணி இசையும் ஹரி நாராயணன் பாடலும் எழுதி உள்ளனர். ஆஷாத் அலவின் இயக்கி உள்ளார்.
கலாபவன் ஷாஜோன் ஒரு முக்கிய போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். திரைக்கதையை எழுத்தாளர்கள் வினோ கே மோகன், ஜி.ஜு ராஜ் எழுதியுள்ளனர். அகிலேஷ் மோகன் எடிட்டிங்கும், மணி பெருமாள் ஒளிப்பதிவும் செய்துள்ளனர். இந்த படத்தை தயாரித்துள்ள பிரேம் கல்லட் இந்த பட டிரைலரை வெளியிட்டுள்ளார். இது புலனாய்வு த்ரில்லராக வெளிவந்துள்ளது.