குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
நடிகர் மோகன்லால் தற்போது தொடர்ச்சியாக மலையாளம், தெலுங்கு மொழிகளில் மாறிமாறி நடித்து வருகிறார். அவர் நடித்த மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் மீண்டும் ஜீத்து ஜோசப்புடன் கூட்டணி சேர்ந்துள்ள 'நேறு' திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதை தொடர்ந்து பிரித்விராஜ் டைரக்சனில் லூசிபர் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தெலுங்கில் உருவாகி வரும் விருஷபா என்கிற படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார் மோகன்லால்.
தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு இளம் புத்த துறவியுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “பழைய அசோகேட்டனும் புதிய உன்னிக்குட்டனும்” என்று பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் மோகன்லால். இந்த பதிவுக்கு காரணம் தெரியாத பலருக்கும் இதன் பின்னணியில் உள்ள தகவலை சொல்லிவிடலாம்.
1992ல் மலையாளத்தில் சங்கீத் சிவன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த படம் 'யோதா'. ஒரு இளம் புத்த துறவியை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி அவரை நேபாளத்தில் உள்ள புத்த மடாலயத்தில் சேர்க்கும் பொறுப்பை மோகன்லால் ஏற்றுக் கொண்டிருப்பார். இதற்கான பயணத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே நிகழும் பாசப்பிணைப்பு அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்த படத்தில் மோகன்லால் அசோகன் என்கிற கதாபாத்திரத்திலும் இளம் புத்த துறவி உன்னிக்குட்டன் என்கிற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.
தற்போது லடாக்கில் லே பகுதியில் தனது படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அதேபோன்று ஒரு இளம் துறவியை மோகன்லால் சந்தித்தபோது எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை யோதா படத்துடன் ஒப்பிட்டு இப்படி ஒரு பதிவிட்டுள்ளார் மோகன்லால். ஏ.ஆர் ரஹ்மான் முதன்முதலாக மலையாளத்தில் இசையமைத்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.