அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் |
கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் கடந்த 8ம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சந்தோஷ் என்ற விவசாயி கலந்து கொண்டுள்ளார். இவர் தன் உடலில் கிலோ கணக்கில் நகை அணிந்து கொண்டு திரிவதன் மூலம் பிரபலமானவர். இந்த நிகழ்ச்சியில் அவர் புலி பல்லால் செய்யப்பட்ட டாலர் ஒன்றை அணிந்துள்ளார்.
அதை நிஜமான புலி பல் தான் என்று வெளிப்படையாகவும் நிகழ்ச்சியில் பேசி வந்தார். புலி பல் வாங்குவதோ, விற்பதோ, வைத்திருப்பதோ இந்திய வன பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். இதனால் இதுகுறித்து பொதுமக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் புகார் செய்யவே கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகளும், பெங்களூரு ராஜேஸ்வரி நகர் காவல் நிலைய அதிகாரிகளுகம் பிக் பாஸ் வீட்டுக்கு சென்று சந்தோஷை கைது செய்தனர். பின்னர் அவர், பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். பிக் பாஸ் வீட்டுக்குள் புகுந்து ஒருவரை போலீசார் கைது செய்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.