'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் கடந்த ஜூலை மாதம் தெலுங்கில் பேபி என்கிற திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றியையும் பெற்றது. அதுவரை ஒரு வெற்றிப்படம் கூட கொடுக்காத ஆனந்த் தேவரகொண்டாவிற்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான வைஷ்ணவி சைதன்யாவுக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. ரசிகர்களிடமும் வைஷ்ணவி வரவேற்பு பெற்றார்.
இந்த நிலையில் இந்த ஜோடி புதிய படம் ஒன்றிலும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தையும் பேபி படத்தை தயாரித்த தயாரிப்பாளரே தயாரித்து வருகிறார். அறிமுக இயக்குனர் ரவி நம்பூரி என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். வரும் கோடை விடுமுறைக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச குமார் நாயுடு கூறியுள்ளார்.