நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

மலையாளத்தில் கடந்தாண்டு வெளியான 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' மற்றும் ரோமாஞ்சம் என சிறிய பட்ஜெட் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்து ஆச்சரியப்படுத்தின. அந்த வகையில் இந்த ஆண்டில் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கடந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஆர்டிஎக்ஸ் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பு பெற்று மிகப்பெரிய அளவில் வசூலித்தும் வருகிறது. இந்தப் படமும் விரைவில் 50 கோடி வசூல் கிளப்பில் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுக இயக்குனரான நகாஷ் ஹிதாயத் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆறு சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. கதையுடன் சேர்ந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை பின்னணியாக கொண்ட இந்த சண்டைக்காட்சிகளுக்கு தான் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் திரையுலகை சேர்ந்த சண்டை பயிற்சி இயக்குனர்களான அன்பறிவு இருவரும் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இளம் நடிகர்களான ஷேன் நிகம், ஆண்டனி வர்கீஸ் மற்றும் நீரஜ் மாதவ் மூவருக்கும் இந்தப்படத்தின் வெற்றி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
இந்த வெற்றி பற்றி இயக்குனர் நகாஷ் ஹிதாயத் கூறும்போது, “இந்த படம் குடும்ப ரசிகர்களுக்கு பிடித்த ஆக்சன் படமாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு உருவாக்கினோம். அதற்காகவே “எங்கள் குடும்பத்தை தொட்டால் உங்களை சும்மா விடமாட்டோம்” என்கிற ஒன்லைனை மையமாக வைத்து இந்த படத்தின் கதையை உருவாக்கி இருந்தோம். சண்டைக்காட்சிகளும் வழிந்து திணிக்கப்படவில்லை என்றாலும் இயல்பாகவே ஆறு சண்டை காட்சிகள் இதில் அமைந்து விட்டன. இந்த படம் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை இருந்தது. அதே சமயம் இந்த அளவிற்கு ரசிகர்களின் வரவேற்புடன் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.