''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கடந்த வருடம் மலையாளத்தில் ஆர்டிஎக்ஸ் என்கிற திரைப்படம் வெளியானது. வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களான ஆண்டனி வர்கீஸ், ஷேன் நிகம் மற்றும் நீரஜ் மாதவ் என மூன்று பேர் இந்த படத்தில் கதாநாயகர்களாக நடித்திருந்தனர். தனது குடும்பத்தை துன்புறுத்தி அவமதித்தவர்களுக்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து பாடம் புகட்டும் ஒரு இளைஞனின் பழிவாங்கும் கதையாக இந்த படம் உருவாகி இருந்தது.
முழுக்க முழுக்க ஆக்ஷனை மட்டுமே மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியிருந்தார் அறிமுக இயக்குனர் நகாஷ் ஹிதாயத். அடுத்ததாக பிரேமலு பட நாயகன் நஷ்லேனை கதாநாயகனாக வைத்து இவர் தனது அடுத்த படத்தை இயக்க இருக்கிறார்.
இந்த நிலையில் இவர் நடிகர் ரஜினிகாந்தை சமீபத்தில் சந்தித்துள்ளார். விமான நிலையத்தில் நிகழ்ந்த இந்த சந்திப்பின்போது பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ் மாஸ்டர்கள் இருவரும் உடன் இருந்தனர். வேட்டையன் படத்திற்கு சண்டை பயிற்சியாளர்களாக பணியாற்றி வரும் அன்பறிவு மாஸ்டர்கள் தான் ஆர்டிஎக்ஸ் படத்திற்கும் பணியாற்றினர். அதில் மார்சியல் ஆர்ட்ஸ் கலையை பயன்படுத்தி ஆறு சண்டை காட்சிகளை அமைத்து பிரமிக்க வைத்திருந்தனர். அந்த நட்பின் அடிப்படையில் அவர்கள் மூலமாக வேட்டையன் படப்பிடிப்பில் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார் இயக்குனர் நகாஷ். ஹிதாயத்.
இந்த சந்திப்பு குறித்து இயக்குனர் நாகாஷ் ஹிதாயத் தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறும்போது, “உங்களது கனவுகளை நனவாக்க உண்மையிலேயே இந்த பிரபஞ்சமே திட்டம் தீட்டிய போது..” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.