பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

'ஜேஎஸ்கே பிலிம் கார்பரேஷன்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறவர் சதீஷ் குமார். ஆரோகணம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பரதேசி, ரம்மி, புரியாத புதிர், தரமணி அண்டாவ காணோம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தரமணி படத்தின் மூலம் நடிகரான இவர் அதன்பிறகு பேரன்பு, கபடதாரி, பிரண்ட்ஷிப், அநீதி படங்களில் நடித்தார்.
தற்போது அவர் தான் தயாரிக்கும் படத்தில் கதை நாயகனாக நடிக்கிறார். படத்திற்கு 'குற்றம் கடிதல் 2' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு திரைக்கு வந்து தேசிய விருது உள்ளிட்ட அங்கீகாரங்களையும் வரவேற்பையும் பெற்ற 'குற்றம் கடிதல்' படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகிறது. பார்த்திபன் நடித்த 'புதுமை பித்தன்', கார்த்திக் நடித்த 'லவ்லி' படங்களை இயக்கிய ஜீவா இயக்குகிறார். சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார், டிகே இசையமைக்கிறார்.
சதீஷ்குமார் கூறும்போது "ஜீவாவின் ஸ்கிரிப்ட் என்னை மிகவும் கவர்ந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த கதை உருவாகிறது. இன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவையான ஒரு கருத்தை சொல்லும் இந்த திரைப்படம், மக்களின் கவனத்தை ஈர்த்து அவர்களை திரையரங்குகளுக்கு வரவழைத்து பெரும் வெற்றி பெறுவதோடு, தேசிய விருதுகளையும் வெல்லும். ஜீவாவின் திரைப்பயணத்தில் 'குற்றம் கடிதல் 2' ஒரு மைல்கல்லாக இருக்கும்.
கொடைக்கானல் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் 60 வயது ஆசிரியராக நடிக்கிறேன். ஓய்வு பெறும் சமயத்தில் குடியரசுத் தலைவர் கரங்களால் நல்லாசிரியர் விருது வாங்கும் நேரத்தில் அவரது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சம்பவங்களை தொகுத்து இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.