''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
ஆண்டுதோறும் அமெரிக்காவில் நடந்து வரும் 'சர்வதே இந்திய திரைப்பட விழா' இந்த ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸில் வருகிற ஜூன் 27ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் வங்கதேசம், இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜய்சேதுபதி நடித்துள்ள 'மகாராஜா' படம் இடம் பெற்றுள்ளது.
இதில் இந்தியா, கனடா, அமெரிக்காவின் பங்களிப்பில் உருவாகியுள்ள 'டீயர் ஜெசி' என்ற படம் முதல் நாள் நிகழ்வில் திரையிடப்பட உள்ளது. இறுதி நாளில் 'மகாராஜா' திரையிடப்பட உள்ளது.
'மகாராஜா' படத்தை நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியின் 50வது படம் இது. அனுராக் காஷ்யப் மற்றும் மம்தா மோகன்தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், இவர்களுடன் நடராஜன் சுப்ரமணியம், அபிராமி, முனிஷ்காந்த், சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோ சார்பில் கீழ் ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் சுதன் சுந்தரம் தயாரித்துள்ளனர்.