ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' கடைசிகட்ட படப்பிடிப்பு கேரளா மாநிலம் அதிரப்பள்ளியில் நடிக்கிறது. அதற்காக ரஜினிகாந்த் அங்கே சென்றுள்ளார். சில நாட்கள் நடக்கும் படப்பிடிப்புக்குபின் சென்னை திரும்புகிறார். இதுவே ரஜினி பங்கேற்கும் கடைசிகட்ட படப்பிடிப்பு என சொல்லப்படுகிறது. பிப்ரவரி முதல் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார்.
இந்த ஆண்டில் அதிக நட்சத்திரங்கள் நடித்த படமாக ஜெயிலர் 2 இருக்கப்போகிறது. ரஜினிகாந்த் தவிர, சிவராஜ்குமார், மோகன்லால், பாலகிருஷ்ணா, விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, சுனில்,மிதுன்சக்ரவர்த்தி, யோகிபாபு, சுராஜ் வெங்சரமூடு மற்றும் ரம்யாகிருஷ்ணா, மிர்னா, அன்னாராஜன் உட்பட பலர் நடிக்கிறார்கள்.சந்தானம் இருக்கிறாரா என்பது சஸ்பென்ஸ். நேரா பதேஹி ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இருக்கிறார்.




