Advertisement

சிறப்புச்செய்திகள்

இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பராசக்தி படத்திற்கு இப்படி வாழ்த்தினார் ரஜினி : சிவகார்த்திகேயன்

13 ஜன, 2026 - 03:42 IST
எழுத்தின் அளவு:
Rajinikanth-congratulated-the-film-Parasakthi-like-this-Sivakarthikeyan
Advertisement

பராசக்தி படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடந்தது. இதில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன், இயக்குனர் சுதா கொங்கரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சேத்தன் பேசியது, ‛‛இந்த படத்தை எல்லாரும் சப்போர்ட் செய்கிறீர்கள் நன்றி. இந்தியாவின் லெஜன்ட் அண்ணாதுரை கதாபாத்திரத்தில் நான் நடித்ததில் மகிழ்ச்சி'' என்றார்

ஶ்ரீலீலா பேசுகையில், ‛‛இதுவரை என் படங்களில் நடனத்திற்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன. முதன்முறையாக ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடித்த எனது நடிப்பிற்கு பாராட்டுகள் கிடைப்பது மகிழ்ச்சி. அதற்காக இயக்குனர் சுதாவிற்கு நன்றி. தமிழில் என் அறிமுக படம் சிறப்பாக அமைந்துள்ளது. என்னுடைய கதாபாத்திரத்தை திரையில் பார்த்துவிட்டு கண் கலங்க வைத்து விட்டது. என் தமிழ் அறிமுகம் நல்ல படம்'' என்றார்

சுதா கொங்கரா பேசுகையில், ‛‛என்னுடைய படத்தில் முதல் தடவை சிலர் நடிப்பதால் சில கடினங்கள் இருந்திருக்கும். காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என கேட்கும் பொழுது கடினமாக இருக்கும். ஒரு நாள் சிவகார்த்திகேயனை அழைத்து 8.30 மணி முதல் 12.30 மணி வரை என்னை பற்றி பேசினேன். எனக்கு புரளி பேசுவது பிடிக்காது. என் படத்தை பாராட்டிய அனைவருக்கும் நன்றி'' என்றார்.

சிவகார்த்திகேயன் பேசுகையில், ‛‛சுதா கொங்கரா என்னிடம் கதையை சொல்லி முடிக்கும்பொழுது தமிழ் உணர்வு மற்றும் அடுத்த தலைமுறைக்கு இந்த படம் எடுத்துக்காட்டாக இருக்கும் எனவும் கருதினேன். இப்படத்தில் நடித்தால் என்னை பற்றி காலத்துக்கும் பேசுவார்கள் என நம்பினேன். ஒரு நடிகனாக இதில் நடித்தது எனக்கு பெருமை. ஒரு நடிகனாக பல்வேறு சவால்கள் இந்த படத்தில் நடிக்கும்போது வந்தது. இந்த படத்தில் காட்டபட்ட காட்சிகளை அனைத்தும் நிஜம் என்று சொல்ல முடியாது, சினிமாவுக்காக சிலவற்றை சேர்த்துள்ளோம். இயக்குனர் எந்த நேரத்திற்கு ஷாட்க்கு வாங்க என்று அழைத்தால் உடனே போய் நிற்பது என்னுடைய கடமை. டாக்டர் படத்தில் இருந்தே மானிட்டர் பார்க்கும் பழக்கத்தை கைவிட்டேன். காரணம் சினிமா ஒரு இயக்குனரின் படைப்பு, அதில் நான் தலையிட விரும்பவில்லை. இந்த எண்ணம் என்னை மென்மேலும் உயர்த்துகிறது.

இந்த படம் எப்படி எல்லாரையும் போய் சேரும் என்று எண்ணி இருந்தோமா அது பூர்த்தி ஆகி விட்டது. சினிமா துறையில் இருந்து ராதிகா, கமல், ரஜினி என வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டே வருகின்றனர். ‛‛வெரி போல்டு மூவி, சூப்பர் செகண்ட் ஆப், பென்டாஸ்டிக் பெர்பார்மன்ஸ்'' என்று ரஜினி வாழ்த்து தெரிவித்தார். டாக்டர் படத்திலிருந்து தற்போது வரை ரஜினி என்னுடைய படங்களுக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார் அதற்கு நன்றி. என் வாழ்நாள் முழுவதுக்கும் ரஜினி சாருக்கு நன்றி. படம் லாபம் எடுத்ததாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது, அதுவே பெரிய வெற்றி நன்றி'' என்றார்.

அதர்வா பேசுகையில், ‛‛இந்த படத்தின் கதையை சுதா கொங்கரா சொல்லும் பொழுது பெருமையாக இருந்தது. என்னுடைய கதாபாத்திரமான சின்னத்துரை கதாபாத்திரம் மிக அருமையாக இருக்கிறது என்று மக்கள் கூறியதற்கு காரணம் சுதாவின் மகிமை. இது முழுக்க மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரனின் கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தில் நடித்தது சந்தோஷம். படத்தில் நடிக்கும் பொழுது நடிகர்களாக தான் வந்தோம் போகப்போக மாணவர்களாக மாறினோம். சப்போர்ட் செய்த அனைவருக்கும் நன்றி'' என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஜனநாயகன் பட விவகாரம் : விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல்ஜனநாயகன் பட விவகாரம் : விஜய்க்கு ... 'ஜனநாயகன்' வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஜன.15ல் விசாரணை? 'ஜனநாயகன்' வழக்கு: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
19 ஜன, 2026 - 08:01 Report Abuse
Anbuselvan ரஜினி அவர்களுக்கு பெரிய மனசு. ஒருவர் தோல்வியில் மற்றும் கஷ்டத்தில் இருக்கும் போது ஆறுதலாக நாலு வார்த்தை கூறுவதுதான் அது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap