டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ், தெலுங்கில் ஒரே வருடத்தில் ஆரம்பமான ரியாலிட்டி டிவி நிகழ்ச்சி 'பிக் பாஸ்'. ஆறு சீசன்களைக் கடந்து இந்த வருடம் 7வது சீசன் ஆரம்பமாக உள்ளது. தமிழுக்கான புரோமோ சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த சீசனில் இரண்டு வீடுகள் இடம் பெறப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
தெலுங்கு பிக் பாஸ் சீசன் இன்று மாலை 7 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. அதன்பின் திங்கள் முதல் வெள்ளி வரையில் இரவு 9:30 மணிக்கும், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பாகப் போகிறது. நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி கடந்த சீசன்களைப் போலவே பரபரப்பாகப் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு பிக் பாஸ் 7ல், நடிகைகள் கிரண், ஷகீலா, அப்பாஸ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழிலும் நடித்துள்ள அவர்கள் தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொள்வது ஆச்சரியம்தான்.




