2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சினிமாவில் நடிக்கும் கனவுகளோடு உள்ளே நுழையும் அனைவருமே ஒரு காட்சியிலாவது நாம் தலை காட்டி விடமாட்டோமா என்கிற ஆர்வத்தில் தான் வருவார்கள். ஆனால் ஒரு படம் முழுவதும் கதாநாயகியாக நடித்தாலும் கூட முக்கால்வாசி படத்தில் தன் முகம் காட்டாமலேயே நடித்துள்ளார் மலையாள நடிகை ஒருவர். ஜூலியானா என்கிற மலையாள படத்தில் நடித்துள்ள இவரது பெயர் கூட இன்னும் படக்குழுவினரால் வெளியிடப்படவில்லை.
அதே சமயம் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிரைலரை நடிகர் திலீப் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற தனது வாய்ஸ் ஆப் சத்யநாதன் பட சக்சஸ் மீட்டில் வெளியிட்டார்.
இந்த டிரைலரை பார்க்கும் போது ஏதோ ஒரு காரணத்தால் ஒரு பானைக்குள் தலை மாட்டிக்கொண்ட நிலையில், தான் சிக்கி உள்ள பிரச்னையிலிருந்து ஒரு பெண் எப்படி போராடி சமாளித்து தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்தி தான் இந்த படம் உருவாகியுள்ளது என்பதை உணர முடிகிறது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லாலை வைத்து கின்னஸ் சாதனையாக 19 மணி நேரத்தில் பகவான் என்கிற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் மாம்புள்ளி தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.