63 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பெத்தி' டிரைலர் | இந்த வாரம், புதிய படங்கள் இல்லையா ? | 'சேயோன்' படப்பிடிப்பு தொடங்கியது: மதுரை விழாவில் கமல் பங்கேற்பு | நடுநிலையாளர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை: தயாரிப்பாளர்களுக்கு நடிகர் சங்கம் கோரிக்கை | பிளாஷ்பேக்: பத்திரிகையாளர்கள் உருவாக்கிய படம் | பிளாஷ்பேக்: பெண் விடுதலை பேசிய பி.விட்டலாச்சாரியா | பிரதமரின் வேண்டுகோளை ஏற்று வந்தே பாரத்தில் பயணித்த அனுபம் கெர் | சகோதரர் இறந்த துக்கத்தை மறைத்துக்கொண்டு மறுநாளே காமெடி காட்சியில் நடித்த ஊர்வசி | சாமியாடும் ரசிகர்கள்: நடிகர் சூர்யா வேண்டுகோள் | அமைச்சர் ராஜ் மோகனுக்கு செயலாளர் விஷால் எதிர்ப்பு, தலைவர் நாசர் வாழ்த்து |

மூன்று ஹீரோக்களை கொண்டு பல ஆக்ஷன் படங்கள் இதற்கு முன்பு உருவாகி உள்ளது. தற்போது மலையாளத்தில் தயாராகி வருகிறது ஆர்டிஎக்ஸ் (ராபர்ட், டோனி, சேவியர்) என்ற படம். மலையாள திரையுலகின் முன்னணி இளம் நடிகர்களான ஷேன் நிகம், நீரஜ் மாதவ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் பாபு ஆண்டனி, லால், ஐமா ரோஸ்மி செபாஸ்டியன், பைஜு சந்தோஷ், மகிமா நம்பியார், மாலா பார்வதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத், சபாஷ் ரஷீத் மற்றும் ஆகாஷ் சுகுமாரன் ஆகியோர் இணைந்து எழுதி இருக்கிறார்கள். அலெக்ஸ் ஜே.புலிக்கல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.
தற்காப்பு கலைகளை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த படத்திற்கு தேசிய விருது பெற்ற ஸ்டன்ட் இயக்குநர்களான அன்பறிவு சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். வீக் எண்ட் பிளாக்பஸ்டர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் சோபியா பால் தயாரித்திருக்கிறார். இந்த படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 25ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.




