கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஷேன் நிகம். கிஸ்மத், கும்பலாங்கி நைட்ஸ் உள்ளிட்ட பல மலையாள படங்களில் நடித்து பிரபலமானார். இந்த நிலையில் ஷேன் நிகம் மீது தயாரிப்பாளர் சங்கத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. 'வெயில்' படப்பிடிப்பில் நடித்துக் கொண்டு இருந்தபோது ஹேர்ஸ்டைலை மாற்றிய சர்ச்சையில் சிக்கினார்.
படப்பிடிப்புக்கு மது அருந்தி விட்டு போதையில் வருவதாக புகார் கிளம்பியது. இதையடுத்து ஷேன் நிகமுக்கு நடிகர் சங்கமும், கேரள சினிமா தொழிலாளர் சங்கமும் தடை விதித்தன. இதனால் அவர் நடிக்க வேண்டிய படங்களில் இருந்து நீக்கப்பட்டார். ஹேர் ஸ்டைலை மாற்றிய விவகாரத்தில் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து தடை நீக்கப்பட்டு மீண்டும் நடித்து வந்தார். என்றாலும் போதை பிரச்சினை, கால்ஷீட் குழப்பம் காரணமாக மீண்டும் அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்துடன், மலையாள நடிகர் சங்கம் இந்த பிரச்னை குறித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து ஷேன் நிகம் மீதான தடையை நீக்க தயாரிப்பாளர் சங்கம் முன் வந்துள்ளது. ஓரிரு நாளில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரலாம்.