ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
மலையாள திரையுலகின் பழம்பெரும் நடிகர் சி.வி.தேவ். நாடக நடிகரான அவர் பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கி நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தார். 83 வயதான சி.வி.தேவ், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். முதுமை காரணமாக பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவர் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். சி.வி.தேவ் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மலையாள நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
வடகரை செம்மரத்தூரில் 1940ல் பிறந்த சிவி தேவ், 19 வயதில் 'விளக்கிண்டே வெளிச்சத்தில்' என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படம் 1959ல் வெளியானது. 1982ல் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய 'கோபுர நடையில்' படத்தில் நடித்து இருந்தார். 'பொந்தன் மட' என்ற படத்தில் மம்முட்டி மற்றும் நசுருதின் ஷாவுடன் இணைந்து நடித்து இருந்தார். சத்யம், ஈ புழையும் கடன்னு, மிழி இரண்டிலும். சந்திரோல்சவம், சந்தோஷம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 'யாரோ ஓராள்' என்ற படத்தை இயக்கினர். இவருக்கு ஜானகி என்ற மனைவியும், சுகன்யா, சுகவ்யா என்ற மகள்களும் சுகாத்மஜன் என்ற மகனும் உள்ளனர்.