டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கேரி பி.ஹெச் இயக்கத்தில் நடிகர் நிகில் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் ஸ்பை. ஆரியன் ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், சான்யா தாகூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஈ.டி என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. வருகின்ற ஜூன் 29 அன்று தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மறைவில் உள்ள ரகசியங்களை மையமாகக் கொண்டு தயாராகியுள்ள உள்ள இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நிறைவு பெறாததால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.
இந்த நிலையில் இந்த படம் எந்த தாமதம் இல்லாமல் சொன்ன தேதியில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் தெரிவித்தார். இதை தொடர்ந்து நடிகர் நிகில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜூன் 29 அன்று இப்படம் வெளியாகும் என்று புதிய போஸ்டர் உடன் பகிர்ந்து இந்த செய்தியை உறுதிப்படுத்தினார்.




