கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் பாச்சுவும் அற்புத விளக்கும் என்கிற படம் வெளியானது. சமீப காலமாகவே சீரியசான படங்களில் தொடர்ந்து நடித்து வந்த பஹத் பாஸில் இந்த படத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் மகன் அகில் சத்யன் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள அஞ்சனா ஜெயபிரகாஷ் இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளார்.
அதேசமயம் கடந்த 2015ல் வெளியான பிரேமம் படத்திலேயே இவருக்கு நடிக்க அழைப்பு வந்தது. மடோனா செபாஸ்டியன் நடித்திருந்த செலினா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஆடிஷனில் கலந்து கொண்டு தேர்வான அஞ்சனா ஜெயபிரகாஷ் இரண்டு நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்தார். ஆனால் அதன்பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை அந்த கதாபாத்திரத்தில் இருந்து இவர் விலக்கப்பட்டு, அவருக்கு பதிலாகத்தான் மடோனா செபாஸ்டியன் நடித்தார்.
அந்த படத்தின் மூலம் மடோனாவுக்கு கிடைத்த புகழ் நாடறிந்த ஒன்று. சினிமாவில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை அப்போதுதான் உணர்ந்து கொண்டேன் என கூறியுள்ள அஞ்சனா ஜெயப்பிரகாஷ், இத்தனை வருடங்கள் கழித்து தற்போது பஹத் பாசில் படம் மூலம் வெளிச்சம் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக தமிழில் துருவங்கள் பதினாறு, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு உள்ளிட்ட சில படங்களிளும் நடித்துள்ளார் அஞ்சனா ஜெயபிரகாஷ்