அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சில ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் 'மை லைப் பார்ட்னர் என்கிற படத்தில் ஓரினச் சேர்க்கையாளராக நடித்து சிறந்த நடிகருக்கான கேரளா அரசு விருது பெற்றவர் இளம் நடிகர் சுதேவ் நாயர். ஆனால் அடுத்ததாக பிரித்விராஜூடன் இணைந்து நடித்த 'அனார்கலி' படத்தின் மூலம் தான் இவர் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். அது மட்டுமல்ல இயல்பிலேயே பாடி பில்டரான இவர் நிவின்பாலியுடன் இணைந்து நடித்த துறமுகம் படத்திற்காக தொப்பை வளர்த்து நடித்து ஆச்சரியப்படுத்தினார்.
இந்த நிலையில் தற்போது முதல் முறையாக தெலுங்கு திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார் சுதேவ் நாயர். தெலுங்கில் இளம் நடிகர் நிதின் நடிக்கும் படத்தில் அவருக்கு வில்லனாக அறிமுகமாகிறார் சுதேவ் நாயர். இந்த படத்தை இயக்குனர் வக்கந்தம் வம்சி இயக்குகிறார். கதாநாயகியாக ஸ்ரீ லீலா நடிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.