மாதவன், கங்கனா படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்பு | மீண்டும் பாடகர் ஆக சிவகார்த்திகேயன் | ஜவுளிக்கடை ஊழியர்களுக்காக கும்கி பாடலை பாடி மகிழ்வித்த டி.இமான் | எம்.எஸ் சுப்புலட்சுமி பயோபிக்கில் சாய்பல்லவி? | வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் |

இயக்குனர் வேணு யெல்டாண்டி இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனத்தின் தயாரிப்பில் ' எல்லம்மா' எனும் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகனாக நானி நடிப்பதாக இருந்தது. தற்போது இந்த படத்தில் கதாநாயகனாக நிதின் நடிக்கவுள்ளார்.
இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே நிதின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ரங் டே எனும் படத்தில் இணைந்து நடித்தனர். இப்போது இரண்டாவது முறையாக ஜோடி சேர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




