பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தற்போது 'குபேரா, தி கேர்ள் பிரண்ட், தாமா' போன்ற படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இதில் தனுசுக்கு ஜோடியாக அவர் நடித்திருக்கும் குபேரா படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ஜூன் 20ம் தேதி திரைக்கு வருகிறது. மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புதிய பதிவுகளை போட்டு வரும் ராஷ்மிகா தற்போது, தான் ரோஜா பூவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ஒரு பதிவு போட்டுள்ளார்.
அந்த பதிவில், 'உங்களை நீங்களே அடிக்கடி பாராட்டிக் கொள்ளவும், நன்றி சொல்லவும் ஒரு மென்மையான நினைவூட்டல். காரணம், நீங்கள் உலகில் உள்ள எல்லா அன்புக்கும் கருணைக்குமே தகுதியானவர்கள்' என்று தெரிவித்திருக்கிறார் ராஷ்மிகா.