பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை | தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம் | பிரபாஸ் பிறந்தநாளில் 3 அப்டேட்கள் தந்த தயாரிப்பாளர்கள் | பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்… | ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ரெட்ரோ' . சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பூஜா ஹெக்டே பேசியதாவது : தமிழ் சினிமாவில் தான் முதலில் அறிமுகமானேன். இந்த வாய்ப்பினை வழங்கிய தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. இந்தப் படத்தில் தமிழில் பின்னணி பேசி இருக்கிறேன். இதற்கு உதவிய இயக்குநர் குழுவினருக்கும் நன்றி. இதில் ருக்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இத்தகைய கேரக்டரை வடிவமைத்ததற்காகவும் அதில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும் இயக்குநருக்கு நன்றி. கேங்ஸ்டர் கதையை எழுதி இருக்கிறீர்கள். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் அதில் நடிப்பதற்கு வாய்ப்பு தாருங்கள்.
சூர்யா இந்த படத்தில் பாரி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். சூர்யாவுடன் இணைந்து நடித்த அனுபவம் மறக்க முடியாதது. எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். அவருடைய எக்ஸ்பிரஸிவ்வான கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். 'கனிமா' பாடலை ரீல்ஸாக உருவாக்கி பதிவிட்ட அனைவருக்கும் நன்றி. என்றார்.




