லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு | மோகன்லாலுக்கு விருது கிடைத்ததை கொண்டாடிய திரிஷ்யம் படக்குழு |
தனுஷ் இயக்கம், நடிப்பில் 'இட்லி கடை' படத்தை ஏப்ரல் 10ம் தேதி ரசிக்கலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு படத்தை ஆறு மாதங்கள் தள்ளி வைத்து அதிர்ச்சியைக் கொடுத்தார்கள். தனுஷின் அடுத்த வெளியீடாக ஜுன் 20ம் தேதி வெளியாக உள்ள 'குபேரா' படத்தின் புரமோஷனை தற்போது ஆரம்பித்துள்ளார்கள்.
நேற்று படத்தின் முதல் சிங்கிளான 'போய் வா நண்பா' பாடல் யு டியூப் தளத்தில் வெளியானது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான பாடலை ஐந்து மொழிகளிலும் வெளியிட்டுள்ளார்கள். தமிழ், தெலுங்கில் இப்பாடலை தனுஷ் பாடியுள்ளார். தனுஷ் நடிக்கும் படம் என்றாலே பாடல்களுக்கும் சேர்த்து ஒரு எதிர்பார்ப்பு வந்துவிடும்.
தனுஷ், தேவிஸ்ரீ பிரசாத் கூட்டணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்துள்ள படம் 'குபேரா'. நேற்று வெளியான பாடல் ஒரு ஆட்டமான பாடலாக அமைந்துள்ளது. ரசிகர்களின் வரவேற்பைக் கொஞ்சம் கொஞ்சமாக பெற்று வருகிறது. 24 மணி நேரத்தில் தமிழில் ஒரு மில்லியன் பார்வைகளை இப்பாடல் கடந்துள்ளது. தமிழை விட தெலுங்கில் கூடுதலாக 3 லட்சம் வரை கிடைத்துள்ளது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது.