17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி | ரூ.550 கோடியை தாண்டியதா கூலி வசூல் | லோகா சாப்ட்டர் 1 சந்திரா படத்திற்கு தனது திரைக்கதையால் வெற்றி தேடித்தந்த நடிகை | பெண் இயக்குனருக்கும், யஷ்க்கும் கருத்து வேறுபாடா? : மலையாள நடிகர் விளக்கம் | தங்கம் கடத்தலில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் நடிகைக்கு 102 கோடி அபராதம் | குருவாயூரப்பனை தரிசனம் செய்த அக்ஷய் குமார் | இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மீது ராஜஸ்தானில் எப்ஐஆர் பதிவு | லோகா படத்தில் சாண்டி பயன்படுத்திய வார்த்தைகள் : கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பட்ஜெட் 1100 கோடி? | ரூ.581 கோடி வசூல் பெற்ற 'சாயரா' |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீடூ என்கிற பிரச்சாரம் மூலமாக திரையுலரை சேர்ந்த பெண்கள், குறிப்பாக நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் அத்துமீறல்கள் குறித்து சோசியல் மீடியாவில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர். இதில் பல பிரபலங்களின் இன்னொரு முகம் வெளிப்பட்டு அதிர்ச்சி தந்தன.
இந்த நிலையில் தற்போது மலையாள திரை உலகை சேர்ந்த வளர்ந்து வரும் இளம் நடிகையான மாளவிகா ஸ்ரீநாத் என்பவர் சில வருடங்களுக்கு முன்பு ஆடிசன் என்கிற பெயரில் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் குறித்து ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். நிவின்பாலி கதாநாயகனாக நடித்த சாட்டர்டே நைட் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் கூறும்போது, “சில வருடங்களுக்கு முன்பு மஞ்சுவாரியரின் மகளாக ஒரு படத்தின் நடிக்க வேண்டும் என்பதற்காக ஆடிசன் நடைபெற்றது. மஞ்சுவாரியர் படத்தில் நடிப்பதென்றால், அவரை பார்ப்பதென்றால் யாருக்குத்தான் ஆசை இருக்காது ? அதனால் அதில் கலந்து கொள்வதற்காக எனது தாய் மற்றும் தங்கையுடன் சேர்ந்து அங்கே சென்றேன். ஒரு தனி அறையில் ஆடிசன் டெஸ்ட் எடுத்த நபர் எனது தலைமுடி சரியாக இல்லை என்றும், பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்று அதை சரி செய்து வருமாறும் கூறினார்.
நான் அங்கே சென்றபோது பின்னால் வந்த அவர் எதிர்பாராத விதமாக என்னை கட்டிப்பிடித்தார். நான் அவரிடம் இருந்து விடுபட திமிறியபோது பத்து நிமிடம் அட்ஜஸ்ட் செய்தால் போதும், மஞ்சு வாரியர் மகளாக நடிக்கும் கதாபாத்திரத்தை எனக்கே தருவதாக கூறினார். நான் அவரிடம் இருந்து விடுபட்டு அவரை தள்ளிவிட்டு வெளியே வந்து விட்டேன். இப்போது நினைத்தாலும் அது ஒரு பயங்கரமான அனுபவமாகத்தான் தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்.