‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

மலையாள திரையுலகில் கடந்த 28 வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ஸ்படிகம். கல்ட் கிளாசிக் வகையைச் சேர்ந்த இந்த படத்திற்கு எப்போதுமே கேரள ரசிகர்களிடம் வரவேற்பு இருந்து கொண்டே இருக்கிறது. பத்ரன் இயக்கிய இந்த படத்தில் ஆடுதோமா என்கிற ஒரு அதிரடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மோகன்லால். தற்போது இந்த படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு 4 கே முறையில் கடந்த பிப்-9ஆம் தேதி வெளியானது. கேரள விநியோகஸ்தர் சங்கமே ஆச்சரியப்படும் வகையில் முதல் நாளன்று கேரளாவில் மட்டும் 77 லட்சம் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு கடந்த சில நாட்கள் முன்னதாக ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான அலோன் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த படம் கேரள அளவில் முதல் நாளில் வெறும் 75 லட்சம் மட்டுமே வசூலித்து தோல்வி படமாக அமைந்தது. இந்த நிலையில் ஸ்படிகம் திரைப்படம் அலோன் படத்தை விட அதிகம் வசூலித்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்ல, இதே தேதியில் மம்முட்டி நடித்த கிறிஸ்டோபர் திரைப்படமும் வெளியாகி உள்ளது. மம்முட்டி படம் போட்டியாக வெளியாகி இருக்காவிட்டால் ஸ்படிகம் திரைப்படம் இன்னும் அதிக வசூலை ஈட்டி இருக்கும் என்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் வியப்புடன் கூறி வருகிறார்கள்.




