நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

மலையாள நடிகை மஞ்சு வாரியர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஜனவரியில் கூட அவர் நடித்த துணிவு மற்றும் ஆயிஷா என இரண்டு படங்கள் வெளியாகின. இப்போதும் அறிமுக இளம் நடிகை போல இளமையுடனும் சுறுசுறுப்புடனும் நடித்து வரும் மஞ்சுவாரியரை பார்த்து இவரது இளமைக்கு காரணம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே சமயம் இவரது தாயாரான கிரிஜா மாதவன் தற்போது தனது 67-வது வயதில் மோகினியாட்டம் நடனத்தை முதன்முதலாக அரங்கேற்றம் செய்து ஆடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இது குறித்து மஞ்சு வாரியர் கூறும்போது, “ஒரு மகளாக என்னை பெருமைப்பட வைத்து விட்டார் என்னுடைய அம்மா.. எதையும் சாதிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதையும், வயது என்பது ஜஸ்ட் ஒரு நம்பர் என்பதையும் நிரூபித்துள்ளார் எனது அம்மா.. மேலும் அவர் லட்சக்கணக்கான பெண்களுக்கு உற்சாக தூண்டுகோலாகவும் இந்த விஷயத்தை செய்து சாதித்து காட்டியுள்ளார்” என்று பெருமிதத்துடன் தனது தாய் குறித்துக் கூறியுள்ளார் மஞ்சு வாரியர்.