புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? | முக்கிய நிபந்தனையுடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பும் கிச்சா சுதீப் |
நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், வினோத், போனி கபூர் கூட்டணியில் உருவாகி உள்ள ஹாட்ரிக் திரைப்படம் ‛துணிவு'. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
வருகிற பொங்கலுக்கு படம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் முதல் பாடலாக 'சில்லா சில்லா' வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது வரை 20 மில்லியனுக்கு அதிகமானபேர் இந்த பாடலை ரசித்துள்ளனர். நேற்று இதன் இரண்டாவது பாடலான 'காசேதான் கடவுளடா' பாடலை வெளியிட்டனர். பணத்தை முன்னிலைப்படுத்தி துள்ளல் பாடலாக அமைந்துள்ளது. இதை வைசாக், ஜிப்ரான் மற்றும் மஞ்சுவாரியர் இணைந்து பாடி உள்ளனர். 20 மணிநேரத்தில் 44 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் இந்த பாடலுக்கு கிடைத்துள்ளது.
இதனிடையே இந்த பாடலில் மஞ்சுவாரியர் பாடியிருக்கிறார். ஆனால் அவரின் குரல் சரியாக கேட்கவில்லை. கோரஸாக வரும் குரலில் ஆண் குரல் தான் அதிகம் ஒலிக்கிறது. இதை வைத்து அவரை நிறைய பேர் டிரோல் செய்தனர். ஏகப்பட்ட மீம்ஸ்களை போட்டு அவரை டிரோல் செய்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள மஞ்சுவாரியர், ‛‛இந்த பாடலில் என் குரல் கேட்கவில்லை என்று கவலைப்படுபவர் கவலை பட வேண்டாம். அது வீடியோ பாடலுக்காக ரெக்கார்ட் செய்யப்பட்டு உள்ளது. உங்களது அக்கரைக்கு நன்றி. டிரோல்களை நான் ரசித்தேன்'' என்றார்.