ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' படத்தின் இசை வெளியீடு இந்த வாரம் டிசம்பர் 24ம் தேதி சனிக்கிழமை மாலை சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த விழாவில் விஜய் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார் என்றும் உறுதியான தகவல் வந்துள்ளது. விஜய் நடித்து இதற்கு முன்பு இந்த வருடம் வெளிவந்த 'பீஸ்ட்' படத்திற்கு எந்த விழாவும் நடத்தப்படவில்லை. எனவே, 'வாரிசு' விழா மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. யார் நம்பர் 1, பொங்கல் போட்டி, தெலுங்கில் எதிர்ப்பு என சில பல சர்ச்சைகளுக்குப் பின் இந்த வெளியீட்டு விழா நடைபெற இருப்பதால் விஜய்யின் பேச்சு எப்படி இருக்கப் போகிறது என்பது பற்றி ரசிகர்கள் மட்டுமல்ல திரையுலகினர், அரசியல்வாதிகள் என பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
'வாரிசு' படத்திற்காக இந்த ஒரு விழாவில் மட்டும் கலந்து கொண்டுவிட்டு விஜய் தனது குடும்பத்துடன் லண்டன் செல்ல உள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.