சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த வாரம் டிசம்பர் 16ம் தேதி வெளிவந்த படம் 'அவதார் - த வே ஆப் வாட்டர்'. உலக அளவில் பெரும் எதர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது.
முதல் நாளிலேயே முன்னணி நடிகர்களின் படங்களைப் போல அதிகாலை காட்சிகள் மட்டுமல்ல நள்ளிரவு 12 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டது. முதல் வார இறுதி வசூலாக இந்தப் படம் 100 கோடியைக் கடந்து 130 கோடி வசூலை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படங்களில் முதல் வார இறுதி வசூலாக 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' படம் வசூலித்த 155 கோடி வசூலை 'அவதார் 2' வசூல் முறியடிக்கவில்லை என்பது ஏமாற்றத்தைத் தந்துள்ளது. அரையாண்டுத் தேர்வுகள் நடந்து வருவதால்தான் அந்த வசூல் பாதிப்பு என்கிறார்கள். இந்த வார நாட்களில் படம் தாக்குப் பிடித்துவிட்டால் இந்த வார இறுதி, அடுத்த வாரம் அரையாண்டு விடுமுறை என வசூல் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது.




