'இந்தியன் 2' தீபாவளிக்கு வெளியிட திட்டம் | கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர் | 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது ? | இளையராஜாவை சந்தித்து நன்றி சொன்ன வெற்றிமாறன் | 'பத்து தல' வெற்றியைக் கொண்டாடிய படக்குழு | விடுதலை படக்குழுவினருக்கு தங்க நாணயம் தந்த வெற்றிமாறன் | பாலாவின் வணங்கான் அடுத்தகட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் துவங்குகிறது | முகேஷ் அம்பானி வீட்டு கலாச்சார நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் | பாரதிராஜா நடிப்பில் மனோஜ் இயக்கும் மார்கழி திங்கள் | 'பத்து தல'யை தடுமாற வைக்கும் 'விடுதலை' |
கடந்தாண்டு காந்தாரா என்கிற படம் வெளியாவதற்கு முன்பு வரை கன்னட இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி என்கிற பெயர் கன்னட திரை உலகில் மட்டுமே பிரபலமாக இருந்தது. தற்போது காந்தாராவின் வெற்றியால் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை பேசப்படும் மனிதராக மாறிவிட்டார் ரிஷப் ஷெட்டி.
அடுத்ததாக காந்தாரா-2 படத்திற்கான கதை விவாதத்தில் ரிஷப் ஷெட்டி ஈடுபட்டுள்ளார் என்று அந்த படத்தின் தயாரிப்பாளரே சமீபத்திய பேட்டி கூறியிருந்தார். இந்த நிலையில் ரிஷப் ஷெட்டியின் இந்த திடீர் புகழால் தற்போது மோகன்லால் நடித்துவரும் மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தில் வில்லனாக நடிப்பதற்கு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் அங்கமாலி டைரிஸ், ஜல்லிக்கட்டு போன்ற வித்தியாசமான கதைக்களங்களை மையப்படுத்தி படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி. சமீபத்தில் மம்முட்டியை வைத்து இவர் இயக்கிய நண்பகல் நேரத்து மயக்கம் படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது மோகன்லால் நடிக்கும் மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தை இயக்கி வருகிறார். மிகவும் பிரமாண்டமான படமாக இந்த படம் உருவாகி வருவதால் இதில் ரிஷப் ஷெட்டியை வில்லனாக நடிக்க வைத்தால் படத்திற்கான வியாபார எல்லை இன்னும் அதிகமாகும் என கணக்கிட்டே ரிஷப் ஷெட்டிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.