தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
இந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தவர் மலையாள இளம் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. மலையாளத்தில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் பீஸ்ட் படத்தில் தன்னை டம்மி ஆக்கி விட்டதாக ஒரு பேட்டியில் கூட குற்றம் சாட்டியவர், பின்னர் அப்படி கூறியதற்காக வருத்தமும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் நடித்துள்ள பாரத சர்க்கஸ் படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக துபாய் சென்றுவிட்டு திரும்பும்போது விமானத்தில் ஏறிய ஷைன் டாம் சாக்கோ விமானிகள் அறையில் என அழைக்கப்படும் காக்பிட் பகுதிக்குள் நுழைய முயற்சி செய்திருக்கிறார். இவரது இந்த நடவடிக்கை அத்துமீறலாக கருதப்பட்டு விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் விமான நிலைய அதிகாரிகளின் விசாரணைக்கு ஆளான சாக்கோ, அங்கிருந்த மருத்துவமனையில் பரிசோதனைக்கும் உட்படுத்தப் பட்டார் என்று சொல்லப்படுகிறது. சில மணி நேர விசாரணைக்குப் பிறகு அவரும், அவருடன் வந்திருந்த அவரது குடும்பத்தினரும் வேறு ஒரு விமானத்தில் கேரளாவிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். நடிகர் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட நிகழ்வு மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.