இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பழம்பெரும் கன்னட நடிகரும், அரசியல்வாதியுமான அம்ரீஷ், நடிகை சுமலதா தம்பதிகளின் மகன் அபிஷேக். தற்போது கன்னட படங்களில் பிசியாக நடித்து வரும் அபிஷேக்கிற்கும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் குரு பிரசாத் பிடப்பாவின் மகள் அவியா பிடப்பாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது நிச்சயதார்த்த விழா நேற்று பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டில் ஒன்றில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டனர்.
அபிஷேக்கின், காதல் மற்றும் திருமணம் குறித்து கடந்த சில வாரங்களாக பல்வேறு தகவல்கள், வதந்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் இந்த திருமண நிச்சயதார்த்தம் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. மணமகள் அவியா பிடப்பா மாடலிங் துறையில் முன்னணியில் உள்ளார். அதோடு திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். திருமண தேதி முடிவாகவில்லை.