10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை போன்று ஆந்திரா, தெலுங்கானாவில் ஜனவரி 12ம் தேதி வரும் சங்கராந்தி பண்டிகை முக்கியமானது. இந்த பண்டிகை தினத்தன்று சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா, என்.டி.பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி படங்கள் வெளிவருகிறது. இதோடு விஜய் நடித்த வாரிசு படமும் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மூன்று படங்கள் வெளிவந்தால் வசூல் பாதிக்கும் என்று கருதிய தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் நேரடி தெலுங்கு படங்களுக்கே தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும் என்றது. இந்த நிலையில் விஜய் படத்திற்கு வழிவிட்டு வீர சிம்ஹா ரெட்டி விலகி கொள்வதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது வீர சிம்ஹா ரெட்டியின் சங்கராந்தி வெளியீடு உறுதியாகி உள்ளது.
இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. கோபிசந்த் மலினேனி இயக்கி உள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். நந்தமூரி பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இவர்களுடன் துனியா விஜய், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதி இருக்கிறார்.