இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் |
நடிகர் பஹத் பாசில் கடந்த ஒரு ஆண்டுக்குள் மட்டுமே, தெலுங்கில் புஷ்பா, தமிழில் விக்ரம் என மலையாளம் தவிர மற்ற இரண்டு தென்னிந்திய மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று, தனது ரசிகர் வட்டத்தையும் வியாபார எல்லையையும் விஸ்தரித்து உள்ளார். இதைத்தொடர்ந்து முதன்முறையாக கன்னடத்திலும் கால் பதித்துள்ள பஹத் பாசில் தற்போது தூமம் என்கிற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். லூசியா மற்றும் யு டர்ன் ஆகிய படங்களையும் இயக்கிய பவண்குமார் படத்தை இயக்கி வருகிறார். பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் தற்போது பஹத் பாசில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் கன்னடம் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட்டிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற காந்தாரா படத்தின் நாயகனும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி, பஹத் பாசில் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். இந்த சந்திப்பின்போது கேஜிஎப் படங்களுக்கு பிறகு இந்த தூமம் படத்தையும் தயாரித்து வரும் ஹோம்பலே பிக்சர்ஸ் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூரும் உடன் இருந்தார்.
இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறும்போது, “இரண்டு ஜென்டில்மேன்களுடன் ஒரு மகிழ்ச்சியான மாலைப்பொழுது” என்று குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் தெனிந்திய சினிமாவின் திறமைகளின் பவர் ஹவுஸ்களான இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.