தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

இயக்குனர் சிவாவின் தம்பியும் வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான நடிகர் பாலா பின்னணி பாடகி அம்ரிதா சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இதை தொடர்ந்து சிறுவயதாக இருந்த தனது மகள் பாப்புவை தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார் அம்ரிதா. நீதிமன்றத்திலும் இந்த வழக்கு வந்தபோது தனது மகள் தன்னுடன் தான் இருக்க வேண்டும் என்கிற தீர்ப்பு அவருக்கு சாதகமாகவே கிடைத்தது
இந்த சூழ்நிலையில் நடிகர் பாலா, கடந்த வருடம் எலிசபெத் என்கிற மருத்துவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் கூட சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பரபரப்பான செய்திகள் வெளியாகி பின்னர் அது மறந்து, இருவரும் மீண்டும் ஒன்றாக இணைந்துள்ளனர். சமீபத்தில் தான் நடித்த சபீக்கிண்டே சந்தோசம் என்கிற படத்தின் முதல்நாள் முதல் காட்சியை பார்க்க இருவரும் ஒன்றாக வந்திருந்தனர். இந்த சமயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாலா, தனது மகளும் தன்னுடன் படம் பார்க்க வருவார் என்று விரும்பியதாகவும் ஆனால் அது நிறைவேறவில்லை என்றும் கூறினார்.
நடிகர் பாலா மறு திருமணம் செய்துகொண்டது போல, அவரது முன்னாள் மனைவி அம்ரிதாவும் பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தருடன் லிவிங் டுகதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார். தங்கள் இருவரின் நெருக்கமான புகைப்படங்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் இருவருமே வெளியிட்டு வருகின்றனர். அம்ரிதாவின் பத்து வயதான மகள் பாப்புவும் கோபி சுந்தர் மீது மிகுந்த பாசத்துடன் இருப்பது குறித்த புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகின.
அதுமட்டுமல்ல தற்போது பாலா தனது மகள் குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்திய சமயத்தில் அவருக்கு ஆதரவாக பலரும் அம்ரிதாவுக்கு எதிராக குரல் எழுப்பினர். ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அம்ரிதா வெளியிட்ட பதிவில், தனது மகள் அவளது தந்தையை பார்க்க விரும்பவில்லை என்றும், அவர் தொலைபேசியில் அழைத்தபோது நான் வரவில்லை என்று அவளே கூறி விட்டதாகவும் தற்போது இருக்கும் புதிய சூழலில் அவள் ரொம்பவே சந்தோஷமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.