ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
கன்னட சினிமாவின் முன்னணி இயக்குனராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு தனது 46வது வயதில் திடீரென மரணம் அடைந்தார். அவர் நடித்த கடைசி படம் கந்ததகுடி. இந்த படம் கர்நாடக மாநில இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது.
இந்த படத்தின் டீசரை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் “உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானவர்களின் இதயங்களில் அப்பு (புனித் ராஜ்குமார்) இன்னும் வாழ்ந்து வருகிறார். அறிவுக்கூர்மையான ஆளுமையுடன் ஆற்றல் நிறைந்தவராகவும், ஒப்பற்ற திறமை படைத்தவராகவும் விளங்கினார். இயற்கை அன்னைக்கும், கர்நாடகாவின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் 'கந்ததகுடிக் ஒரு சமர்ப்பணம். இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துகள்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், கந்ததகுடி படத்துக்கு கர்நாடக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. இந்த படத்தின் அறிமுக விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பேசியதாவது: புனித் ராஜ்குமார் நம்மைவிட்டு சென்றுவிட்டதாக நினைக்க வேண்டாம். அவர் நம்முடன்தான் இருக்கிறார். புனித் ராஜ்குமார் நடித்துள்ள கந்ததகுடி கன்னட நாட்டின் கலை மற்றும் இயற்கைக்குப் பெருமை சேர்ப்பதாகவும், வனம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் உள்ளது. அனைவரும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். அதற்கு வசதியாக படத்துக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும். என்றார்.
முதல்வரின் இந்த பேச்சை தொடர்ந்து கர்நாடக மாநில அரசு முறைப்படி வரிவிலக்கு அறிவித்து அரசாணை வெளியிட்டது.