அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள காந்தாரா படம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. 20 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம் 200 கோடியை தாண்டி வசூலையும் வாரிகுவித்து வருகிறது. நடிகர் ரஜினி படத்தை பார்த்துவிட்டு இந்தியாவின் மாஸ்டர் பீஸ் என்று புகழ்ந்துள்ளார்.
இந்நிலையில், கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குருவின் ஏற்பாட்டின் பேரில் 'காந்தாரா' திரையிடப்பட்டது. இது தொடர்பாக ஈஷா வெளியிட்ட பதிவில் "கந்தாரா திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. கோவை ஈஷா யோகா மையத்தில் இப்படத்தின் சிறப்பு காட்சியை ஹோம்பேல் பிலிம்ஸ் குழுவினர் ஏற்பாடு செய்தனர். இதற்காக ரிஷப் ஷெட்டி, ஹோம்பேல் நிறுவனத்திற்கு நன்றி'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காந்தாரா ஈஷாவில் திரையிடப்படும் இரண்டாவது படம். இதற்கு முன்பு 2019ம் ஆண்டு கங்கனா நடித்திருந்த மணிகர்னிகா படம் திரையிடப்பட்டது. இந்த படம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய ஜான்சி ராணியின் வாழ்க்கை கதை.