தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மலையாளத்தில் 2005ல் மம்முட்டி நடிப்பில் வெளியான 'ராஜமாணிக்கம்' என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அன்வர் ரஷீத். அதன்பின் துல்கர் சல்மான் நடித்த உஸ்தாத் ஹோட்டல், நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த வருடம் பஹத் பாசில் நடிப்பில் வெளியான ட்ரான்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய இவர் தான். சூப்பர்ஹிட்டான 'பிரேமம்' படத்தையும் தயாரித்தார்.
இந்தநிலையில் ட்ரான்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இவர் மம்முட்டி நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. அந்த வகையில் மம்முட்டியுடன் 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் கைகோர்க்கிறார் அன்வர் ரஷீத்.
இன்றும் கூட கேரளாவில் விஷேச தினங்களில் மற்ற மலையாள சேனல்களில் எத்தனை புதுப்படங்களை ஒளிபரப்பினாலும், ஒரு குறிப்பிட்ட சேனல் மட்டும் நம்ம ஊரில் 'பாட்ஷா'வை களம் இறக்குவது மாதிரி அங்கே 'ராஜமாணிக்கம்' படத்தை தான் ஒன்மேன் ஆர்மியாக களம் இறக்கி வருகிறது. 17 ஆண்டுகளுக்கு முன்னரே 23 கோடி ரூபாய் வசூலித்த படம் என்கிற சாதனையையும் இந்தப்படம் செய்தது. அதுமட்டுமல்ல மம்முட்டிக்கு காமெடி ஒர்க் அவுட் ஆகாது என அதுவரை இருந்த மாயையையும் இந்தப்படம் அடித்து தகர்த்தது குறிப்பிடத்தக்கது..